விஜய்யின் 64 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ (XB பிலிம் கிரியேட்டர்ஸ்) தயாரிக்க தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவை சத்திய சூர்யன் மேற்கொள்ள அனிருத் இசையமைத்து வருகிறார். இதுநாள் வரை பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இப்போது ‛மாஸ்டர் என பெயரிட்டு, மூன்றாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்கள்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அதனாலேயே படத்திற்கு இப்படியொரு தலைப்பை சூட்டி உள்ளனர்.
Lanka Newsweek © 2026